வீட்டுத்திட்டம் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்!

ஸ்ரீலங்காவில் அனைவரையும் இலக்காக கொண்டு எதிர்காலத்தில் வீடமைப்புத் திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச ஊழியர்கள் என அனைவரும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள்.

பிரதமர் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலே இந்தத் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நகர்ப்புறங்களில் மக்கள் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் யாருடைய தலையீட்டிற்கும் உட்பட்டு வணிக நிலையங்களுக்கு ஒதுக்கிக் கொள்ளாது இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்படி இதன்போது பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.