விஷால் அணியை விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன்: டைரக்டர் சேரன் அறிக்கை

151530af-5b80-4670-9ccc-953802131d71_S_secvpf.gifடைரக்டர் சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசியபோது, விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது.

1990களில் இருந்து சரத்குமாரை நன்கு அறிந்தவன் நான். அவசர உதவி எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் அவரை நடுசாமத்தில் எழுப்பியிருக்கிறேன். ஒருமுறை பிரகாஷ் என்ற சிறுவனுக்கு இருதய ஆபரேசனுக்கு, இன்னொருமுறை சம்பத்குமார் என்ற உதவி இயக்குனரின் இருதய ஆபரேசனுக்கு, பல நேரங்களில் கல்வித்தொகை வேண்டி அவரிடம் சென்றேன்.

நடிகர் சங்க வேலைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விதம், அவரது தொலைநோக்கு சிந்தனை இவையெல்லாம் எனக்கு தெரியும்.

அதேநேரம் எதிர் முனையில் இருந்த நாசர் எனக்கு நண்பர்தான், நிறைய முறை அவரோடு எங்கள் திரையுலகம் தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர்மீதோ, சகோதரர் பொன்வண்ணன் மீதோ அல்லது நண்பர் கருணாஸ் மீதோ எனக்கு எந்த கருத்து வேறுபாடோ, சிந்தனை தொடர்பான சந்தேகங்களோ இல்லை.

LEAVE A REPLY