விஷாலுக்கு புகைச்சல் – சிம்புவிடம் திடீர் நெருக்கம் காட்டும் வரலட்சுமி

1479464614-4962நடிகை வரலட்சுமி, நடிகர் சிம்புவிடம் நெருக்கம் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த காதலுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றி விழாவை, அப்படத்தின் நாயகன் சிம்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர். இதில் த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன், ஏ.ஆர்.ரகுமான், படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திரிஷா, சிம்பு, வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். முக்கியமாக, சிம்புவும் வரலட்சுமியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிம்புவும், வரலட்சுமியும் ‘போடா போடி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சிம்புவிற்கும், விஷாலுக்கு ஆகவே ஆகாது. விஷாலிடம் இருந்து வரலட்சுமி விலகிய நிலையில், சிம்புவிடம் அவர் நெருக்கம் காட்டி வருவது, விஷால் தரப்பிற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

LEAVE A REPLY