விஷாலுக்கும் சிம்புவுக்கும் தான் பகையாமே? பின்னணியில் நயன்தாரா?

Nayanthara in saree photo _1_நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தீவிரம் காட்ட காரணம் சரத்குமார் உடனான பெர்சனல் பகை என்று பகிரங்கமாக சொன்னார் சிம்பு. விஷால் கேப்டன் ஆன உடன் கிரிக்கெட் டீமை விட்டே வெளியேறியதாகவும் சொன்னார்.

உண்மையிலேயே சிம்புவுக்கும் விஷாலுக்கும்தான் பெர்சனல் பகை என்கின்றனர். விஷால் மீதான சிம்புவின் கோபத்திற்கு காரணம் நயன்தாரா என்றும் கிசு கிசுகிசுக்கிறது கோடம்பாக்க வட்டாராம்.

சமாதானம் பேச வேண்டும் என்றுதான் பாக்யராஜ், பூர்ணிமா ஆகியோரை கூப்பிட்டார் ராதிகா. ஆனால் பிரஸ்மீட்டில் சிம்பு பேசியது சமாதானம் என்ற வார்த்தையையே அடித்து நொறுக்கிவிட்டது. அந்த அளவிற்கு வாடா போடா என்கிற தொனியில் பேசி குழப்பத்தை மேலும் அதிகரித்து விட்டார் சிம்பு.

LEAVE A REPLY