விவேகானந்தர் ஆங்கில பாடத்தில் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?

daily_news_3027569055558டெல்லியை சேர்ந்த ஹிண்டால் சென்குப்தா என்பவர் சுவாமி விவேகானந்தர் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். ‘தி மாடர்ன் மாங்க்’ என பெயரிடப்பட்ட இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் புத்தகத்தின் ஆசிரியர் ஹிண்டால் சென்குப்தா கூறியதாவது:
சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தத்துவ ஞானியாவார். இன்றைய நவீனத்துவத்தை நமக்கு அடையாளம் காட்டியுள்ளார். அவர் மற்ற துறவிகளை போன்றவர் இல்லை என்பது நமக்கு தெரியும். தான் உட்பட தன்னை சுற்றியிருந்த அனைத்து குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். வசதியான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்ததால் நல்ல மற்றும் சிறந்த கல்வி அவருக்கு கிடைத்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பள்ளியில் அவர் கல்வி பயின்றார். அவர் ஆங்கிலத்தில் நன்கு பேசுவதற்கும், எழுதுவதற்கும் அநேகமாய் அதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கும். தனது ஆங்கில பேச்சாற்றலால் ஆயிரக்கணக்கானவரை கவர்ந்தவர். ஆனால் அதே நேரத்தில் அவர் ஆங்கில பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அவரது திறனை பிரதிபலிப்பவையாக இல்லை.

சிகாகோ மாநாட்டில் தனது சொற்பொழிவின் மூலம் அமெரிக்கர்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல என்று கூறும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. அதே நேரத்தில் அவர் பெற்றுள்ள மதிப்பெண்களே மிகவும் குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழக தேர்வுகளில் ஆங்கில பாடத்தில் மூன்று ஆண்டுகளிலும், 47, 46 மற்றும் 51 மதிப்பெண்களையே விவேகானந்தர் எடுத்துள்ளார். மற்ற பாடங்களிலும் அவர் சராசரி மதிப்பெண்களையே பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY