விவாகரத்துக்கு தனுஷ் காரணமா?- என்ன சொல்கிறார் அமலா பால்

1473159811-0869நடிகை அமலா பால் தனது கணவர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது விவாகரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நடிகர் தனுஷுடன் ஏற்பட்ட நட்புதான் முக்கிய காரணம் என வதந்திகள் பரவின. இது குறித்து இருவரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த வதந்திகளுக்கு மத்தியிலும் தனுஷ் தன்னுடைய விஐபி2 படத்தில் அமலா பாலை நாயகியாக்கினார்.

இந்நிலையில் தனுஷ் குறித்த வதந்திகளுக்கு முதன்முறையாக அமலா பால் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் விவாகரத்திற்கு தனுஷ் காரணம் என்று பரவிய செய்திகளை கேள்விப்பட்டவுடன் எனக்கு மிகவும் அசிங்கமாகவும் மனக்கஷ்டமாகவும் இருந்தது, விஜய்யுடன் என்னை சேர்த்து வைக்க தனுஷ் எவ்வளவு முயன்றார் என்பது எனக்கு தெரியும். அப்படியிருக்கு எப்படி இப்படி வதந்தி பரவியது என தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY