விளையாட்டுத்துறை அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார் நாமல்

புதிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தமது கடமைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல், இன்று காலை டோரிங்டனிலுள்ள விளையாட்டு அமைச்சில், புதிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது இஸ்லாம் மற்றும் இந்து மத மதகுருமார்களினால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் ஏராளமான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை நாமல் ராஜபக்ஷ, இன்று மதியம் விளையாட்டு அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றவுள்ளார்.