விரைவில் உலகம் உண்மையை அறிய செய்வோம் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பதில்

பயங்கரவாத புகழிடம் விவகாரத்தில் பாகிஸ்தானின் மீது அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் அரசு கடும் கோபம் கொண்டு உள்ளது.

பாகிஸ்தானுக்கு இதுநாள்வரை அளித்து வந்த நிதியுதவியை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்துள்ள டொனால்டு டிரம்ப், “பாகிஸ்தானுக்கு 15 ஆண்டுகளாக நிதியுதவி அளித்தது முட்டாள்தனம், வஞ்சகம் எண்ணம் கொண்ட பாகிஸ்தான் பொய்களை தவிர வேறு எதையும் தந்தது இல்லை. அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக நினைத்து பொய்களை பாகிஸ்தான் அள்ளி வீசியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தேடும் பயங்கரவாதிகள் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்கிறது.” என சாடிஉள்ளார்.

இந்நிலையில் விரைவில் உலகம் உண்மையை அறிய செய்வோம் என டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பதில் கொடுத்து உள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப், “கடவுளின் விருப்பப்படி டொனால்டு டிரம்ப் டுவிட்டருக்கு பதில் அளிப்போம், உண்மைகளுக்கும், கற்பனைகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பதை விரைவில் உண்மையை வெளி உலகத்திற்கு கொண்டு வருவோம்,” என கூறிஉள்ளார்.

LEAVE A REPLY