விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமண திகதி அறிவிப்பு

i3.phpஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை நேற்று திருமணம் செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் மற்றொரு முன்னணி கிரிக்கெட் வீரரான விராத் கோஹ்லி, பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார். இவர்களுடைய திருமண அழைப்பிதழ் தற்போது வெளிவந்துள்ளது.

‘பிகே’ உள்பட பல படங்களில் நடித்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் திருமணம் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளுக்காக விராத் கோஹ்லி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்தபோது அனுஷ்காவும் உடன் சென்று அவருடைய விளையாட்டை நேரில் ரசித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

LEAVE A REPLY