விரல்களை மடக்கிய நடிகை… கொதித்த தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சம்பள விஷயத்தில் ஒரு சிலருக்கு விரல்களை மடக்கி காட்டுவதால் தயாரிப்பாளர்கள் கொதித்து இருக்கிறார்கள்.

பெரிய நம்பர் நடிகை தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறாராம். ஒரு பக்கம் உச்ச நடிகர்களுடன் ஜோடி, இன்னொரு பக்கம் தனி கதாநாயகியாகவும் வலம் வருகிறாராம். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடிக்க கேட்டால் 4 அல்லது 5 விரல்களை காட்டுகிறாராம். முன்னணி ஹீரோ என்றாலோ கதை பிடித்து இருந்தாலோ 3 விரல்களுக்கு சம்மதிக்கிறாராம்.

ஆனால் தன் சொந்த மொழியான மலையாளத்தில் மட்டும் விரல்களை மடக்கி வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் கால்வாசி மட்டும் வாங்கிக்கொண்டு நடிக்கிறாராம். இது தமிழ், தெலுங்கு சினிமாவில் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம். சமீபத்தில் அப்படி ஒரு மலையாள படத்தில் ஒரு கோடி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்த தகவல் கிடைத்ததும் கொதித்து போன தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தை சங்கம் மூலம் பேசி நடிகைக்கு ரெட் கார்டு போட்டு விடலாமா என்று ஆலோசித்து வருகிறார்களாம்.