வியாழேந்திரனின் ஆதரவு கோட்டாபயவுக்கு

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.