விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் முகுருஜா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ரஷியாவின் குஸ்னெட்சோவாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய 15-ம் நிலை வீராங்கனையான முகுருஜா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்வோவாக்கியாவின் ரைபரிகோவாவை 6-1,6-1, என்ற நேர் செட்களில் முகுருஜா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முனேறினார்.

LEAVE A REPLY