விமல் வீரசங்ச CIDயில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டம் ​ தீட்டப்பட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, அவரின் மனைவி சசி வீரவங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.