விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

நடிகைகள் கவர்ச்சி படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி வெளியிடும்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகின்றனர்.

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யு டர்ன், சீமராஜா இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. இதனை கொண்டாட தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு டூர் சென்றுள்ளார். அங்கே எடுத்த படுகவர்ச்சி படங்களை டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த படங்களுக்கு 8 லட்சத்துக்கு மேற்பட்ட லைக்குகளும் 5000 கமெண்டுகளும் வந்தன. கமெண்டுகளில் நாகார்ஜுனாவின் குடும்ப ரசிகர்கள் சமந்தாவை கடுமையாக விமர்சித்தனர். பாரம்பரிய குடும்பத்தின் மருமகள் இப்படி செய்யலாமா? என்று விமர்சித்தார்கள்.

இது சமந்தாவை கோபப்படுத்தி உள்ளது. கமெண்டுகளுக்கு பதில் அளித்திருக்கும் சமந்தா ‘இது என்னுடைய வாழ்க்கை. திருமணம் நடந்திருந்தாலும் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று நான் தான் முடிவெடுப்பேன். நீங்கள் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.