விடுதலைப் புலிகளுடன் செய்த ஒப்பந்தத்திற்காக மஹிந்தவை விசாரிக்க நேரிடலாம்!

makiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டி ஏற்படலாம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்­தின்­போது பல்­வேறு புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் மீது தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் பல நபர்­களும் இத் தடைப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் 8 அமைப்­பு­கள்­மீ­தான தடையும் 267 நபர்­கள்­மீ­தான தடையும் அண்­மையில் அர­சாங்­கத்­தினால் நீக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த விவ­காரம் பற்றி தினேஷ் குண­வர்­தன எம்.பி.யால் நேற்றுமுன்தினம் திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணை­ மீ­தான விவா­தத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தடை­வி­திக்­கப்­பட்ட புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் உடன்­ப­டிக்­கை­ககள் செய்­து­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன இங்கு கேள்வி எழுப்­பு­கிறார். எனினும் 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் செய்­து­கொண்ட உடன்­ப­டிக்கை குறித்தும் நாம் விசா­ர­ணைகள் மேற்­கொள்ள வேண்டும்.

புலம்­பெயர் அமைப்­புகள் மீதான தடை­நீக்கம் குறித்து இங்கு கேள்விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. ஆனால் அதிலும் பார்க்க பார­தூ­ர­மான செயற்­பா­டுகள் இங்கு அரங்­கே­றி­யி­ருக்­கின்­றன. 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் நூற்­றுக்­க­ணக்­கான புலம்­பெ­யர்ந்தோர் இங்கு வரு­கை­தந்­தனர். அந்த சந்­தர்ப்­பத்தில் அவர்­களால் இங்கு முத­லீ­டு­களை செய்­வ­தற்கு ஏற்ற சூழல் இல்­லா­ததால் அவர்கள் இங்­கி­ருந்து திரும்­பி­விட்­டனர்.

எனினும் எமது அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் நாம் இன ஐக்­கி­யத்­தையும் ஒற்­று­மை­யையும் ஐக்கிய இலங்­கை­யையும் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கி­லேயே செயற்­ப­டு­கின்றோம். நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் அத­னைத்தான் செய்து வரு­கின்­றது. புலம்­பெயர் அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் இந்­நாட்டின் பிர­ஜை­களே என்­பதை மறந்­து­விடக் கூடாது.

இதே­வேளை 2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் புலி­க­ளுடன் நேரடித் தொடர்­பு­டைய 140 பேரை விடு­தலை செய்­துள்­ளது என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். புலம்­பெயர் அமைப்­பு­களின் தடை தொடர்பில் இங்கு கேள்­விகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அது­பற்றி ஆரா­யு­மாறும் கூறப்­ப­டு­கி­றது. எனினும் 2005 ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கைகள் தொடர்­பிலும் நாம் தேட­வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம் என்றார்.

LEAVE A REPLY