விடுதலைப்புலிகள் காலத்தில் செயற்பட்டதைப்போலவே கூட்டமைப்பு இன்றும் உள்ளது – சி.வி.கே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதே நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறது என வடமாகாண அவைத் தலைவர், சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

விடுதலைப்புலிகள் இருக்கும் காலத்தில் எவ்வாறு கூட்டமைப்பு இருந்ததோ தற்போது சில உறுப்பினர்கள் மாறினாலும் அதேபோன்றே கட்சி செய்யப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலேயே பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பிற்குள் தொடர்ந்தும் இருக்கின்றது என்றும் சி.வி.கே.விவஞானம் தெரிவித்தார்.