விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான கருணா சுதந்திரமாக உலவும் போது அவரின் கீழ் செயற்பட்ட போராளிகள் சிறையில்!

விடுதலைப்புலிகளின் முக்கியத் தளபதியான கருணா என்று அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரன், தற்போது அரசியலில் முக்கியஸ்தராக இருக்கும் போது, அவருக்கு கீழ் செயற்பட்ட போராளிகள் மட்டும் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறையில் அடைத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியாக செய்பட்ட கருணா, அரசியலில் முக்கியஸ்தராக இருக்கும்போது, அவருக்கு கீழ் செயற்பட்ட போராளிகள் மட்டும் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயம் சரியான நீதி இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எனவே புதிய ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வழிவகுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.