விடாது தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்!

கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்டம் 698வது நாளான இன்றும் இராணுவ முகாம் முன்னால் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் நேற்று இரவு பற்றை புதர்களுக்கு இடையில் தூங்கினர்.இராணுவத்தால் தண்ணீரும் மறுக்கப்பட்ட நிலையில் சிறுமிகளும் பெண்களும் தமது பறிபோன காணிகளை பார்த்தவாறே பற்றைகளிற்குள் உறங்கிய பரிதாபம் அரங்கேறியிருந்தது.

தமது காணிகளை அரசு விடுவிக்காவிட்டால் அடாத்தாக உள்நுழையப்போவதாக மக்கள் அறிவித்துள்ள நிலையில் படைத்தரப்பு அச்சங்கொண்டுள்ளது.காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் மக்களை வீதிகளில் அமரக்கூட அனுமதிக்காத பரிதாபம் தொடர்கின்றது.

இந்நிலையில் அருகாகவுள்ள பற்றைக்காடுகளில் படுப்பதும் பின்னர் இராணுவ வாகனங்களின் அமர்ந்துமென மக்களது போராட்டம் தொடர்கின்றது.