விஜய் 59தில் விஜய் பாடிய புதிய பாடல்!

vijay-songஅட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்துக்காக, ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலை முடித்திருக்கிறார் விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் விஜய் இரண்டு பாடல்களைப் பாடுகிறார். விஜய் பாடவிருக்கும் பாடல்களை, வேறு ஒருவரை வைத்து பாட வைத்து படப்பிடிப்புக்காக கொடுத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், இன்று காலை ஜி.வி.பிரகாஷின் ஸ்டூடியோவுக்கு வந்த விஜய் ஒரு பாடலை முடித்துக் கொடுத்தார். ‘செல்லக்குட்டி’ என்று தொடங்கும் அப்பாடலை ஏற்கெனவே காட்சிப்படுத்திவிட்டார் இயக்குநர் அட்லீ. விஜய் பாடவிருக்கும் இன்னொரு பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.

LEAVE A REPLY