விஜய் மட்டுமல்ல தனுஷும் மேஜிக்மேன் தானாம்..!

தமிழ் சினிமாவில் அரிதாக பயன்படுத்தப்படும் கதாபாத்திரம் தான் மேஜிக் மேன் கதாபாத்திரம். ஒரு சிலரை தவிர கண்ணுக்கெட்டிய வரையில் பிரபல நடிகர்கள் யாரும் ஒரு மேஜிக்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததாக தெரியவில்லை. இந்தநிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர் மற்றும் மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய். இதில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய்.

அதேசமயம் நடிகர் தனுஷும் தற்போது ஒரு படத்தில் மேஜிக்மேன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் தமிழில் அல்ல… ஹாலிவுட் படத்தில். ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்கிற பெயரில் கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் அது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் அஜாதசத்ரு எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார்.. இதில் இவருக்கு தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் மேஜிக் கலைஞர் வேடமாம்.

LEAVE A REPLY