விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

nkதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படமான ‘புலி’ நாளை வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இவரது வீட்டில் ​நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமில்லாது, நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, கொச்சி, ஐதராபாத், திருவனந்தபுரம் என 32 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நடிகர் மற்றும் நடிகைகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் திடீர் சோதனை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY