விஜயகாந்த் குடும்பம் வீட்டிலேயே முடக்கம்

i3.phpதேர்தல் படுதோல்வியால், விஜயகாந்த் மட்டுமின்றி, அவரது ஒட்டுமொத்த குடும்பமும், விரக்தியில் மூழ்கியுள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வீடு, சென்னை, விருகம்பாக்கம், கண்ணம்மாள் தெருவில் உள்ளது. விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வீடு, சாலிகிராமம், வெங்கடேஷ்வரா காலனியில் உள்ளது.
சென்னையில் இருக்கும் நாட்களில், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்வது விஜயகாந்தின் வழக்கம். அரும்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு செல்வது, சுதீஷ் வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக, இவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி
கிடக்கின்றனர். உளுந்துார்பேட்டையில், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதுடன், ‘டிபாசிட்’டையும் பறிகொடுத்ததால், விரக்தியின் உச்சத்தில், விஜயகாந்த் இருக்கிறார். விஜயகாந்த் மட்டுமின்றி, அவர் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரும் மன
வருத்தத்தில் உள்ளனர்.இதனால், இவர்கள் அனைவரும், தங்கள் வழக்கமான பணிகளில் ஆர்வம் காட்டாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சுதீஷ் வீட்டிலும், இரண்டு நாட்களாக இதே நிலை தான் நீடிக்கிறது.

LEAVE A REPLY