விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கை குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கு​ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை சம்பந்தமாக அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.