விக்ரம் மகன் துருவ் உடன் டூயட் பாடும் கௌதமி மகள்

தெலுங்கில் ஹிட்டடித்த `அர்ஜுன் ரெட்டி’ படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

வர்மா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார்.

தனக்கு தேசிய விருதை பெற்று தந்த பாலாதான் இப்படத்தை இயக்க வேண்டும் என நினைத்த விக்ரம் தன் மகனை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.

இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் நாயகி தேர்வு சில மாதங்களாக நடந்து வந்தது.

சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கவுதமியின் மகள் சுபுலட்சுமி இதில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY