வாசன் உண்ணாவிரதம்

1502677082Untitled-1தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மனித உரிமை மீறுதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடி உரிமையை மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று (சனிக்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

த.மா.கா. தொடங்கிய பிறகு மாநில அளவிலான முதல் உண்ணாவிரத போராட்டம் என்பதால் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள்.

LEAVE A REPLY