வவுனியா வர்த்தகர் சங்கமும் கடையடைப்புப் போராட்டத்தில் குதிக்கிறது!

வவுனியாவில் உள்ளூர் பேருந்து சேவைகளை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி நாளை கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சங்கத் தலைவர் ஆர். கிரிதரன் இவ்வாறு தெரிவித்தாா்.

நேற்றிலிருந்து வவுனியா மத்திய பேருந்து நிலையம் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையினால் மூடப்பட்டது.

இதையடுத்து பேருந்து நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை தற்போதும் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குமாறு அவா் மேலும் தெரிவித்தாா்.

LEAVE A REPLY