வழக்குகள் தாமதமாவதற்கு சட்டமா அதிபரே பொறுப்பு

மத்திய வங்கிக் கொள்ளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தாமதமாவதற்கு சட்டமா அதிபரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது சம்பந்தமாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியது சட்டமா அதிபர் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஷேட மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் அதில் ஓரிரு வழக்குகள் மாத்திரமே தற்போது இடம்பெறுவதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.