வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69 ரூபாவாக இருந்தது. இது நேற்று 180.19 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒரு மாத காலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 4.50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளினால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.

எனினும், இந்த ஆண்டில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வலுவடைய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.