வலி.வடக்கில் இராணுவப் பிடியில் இருந்த 683 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த பொதுமக்களின் 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்த காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளித்துள்ளார்.

5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY