வலிந்து காணாமலாக்கப்படும் விடயத்தில் இலங்கை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது – ஐ.நா

வலிந்து காணாமலாக்கப்படும் விடயத்தில் இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று(வெள்ளிக்கிழமை) நினைவு கூறப்படுகின்றது.

இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காணாமல்போனோர் அலுவலகம் மாபெரும் பொறுப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது. குறித்த அலுவலகத்தின் சவால்மிக்க ஆணையை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

நீண்டகால நோக்கிலான நிலைபேறான முயற்சிகளின் ஊடாகவே துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கான தீர்வையும், மீட்சியையும் அளிக்க முடியும்’ என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.