வருங்காலத்தில் மனிதர்களின் உணவுகள் என்ன? அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்

வருங்கால மனித உணவுத் தேவையைக் கணக்கிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தி 70 சதவிகிதம் உயர வேண்டும், ஆனால் விவசாய நிலங்கள் மிக குறைநது வருகிறது.

நிலங்கள் குறைந்து வருவதால் வருங்காலத்தில் பூச்சிகளை உணவாக உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என ரொக்லோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூச்சிகள் மூலம் உணவுகள் தயாரிப்பது குறித்து போலந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருங்கால உணவுப் பொருள் குறித்த ஆராய்ச்சியில் உண்ணத் தகுந்த பூச்சிகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. பூச்சிகளில் ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பது உட்பட பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், லார்வாக்கள் மற்றும் எறும்புகளில் மசாலா சுவையும் புளிப்பு சுவையும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் சீனாவில் உள்ள கடைகளில் வறுத்த பூச்சிகள் உணவாக பரிமாறப்படுகின்றன. அங்குள்ள மக்கள் பூச்சிகளை ரசித்து சாப்பிடுகின்றனர்.

பொதுவாக நமது நாட்டில் உணவு பொருட்களில் சிறிய பூச்சிகள் இருந்தாலே அது தரமற்ற பொருளாகி விடும் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY