வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை ஏற்பட்டுள்ள நிலையிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த சலுகை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.