வரிக் குறைப்பினால் எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – சரத் அமுனுகம!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமுல்படுத்தப்பட்ட வரிக் குறைப்புக்கள் எதிர்பார்த்த முடிவுகளை வழங்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த முடிவுகள் தொடர்பாக அரசாங்கம் பொருளாதார நிபுணர்களின் உதவியுடன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழங்கப்பட்ட வரி சலுகைகளின் விளைவாக அதாவது வரிகளை குறைத்து, வட்டி விகிதங்கள் கைவிட்டு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டபோது உற்பத்தி அதிகரிக்க வேண்டும்.

அவ்வாறு உற்பத்திகளை அதிகரிக்க நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதுடன் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் சரத் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

எனவே தனது புரிதலின் படி மற்றும் விமர்சகர்களின் கூற்றுப்படி எதிர்பார்க்கப்பட்ட முதலீடு தற்போது பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.