வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு

வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்கள் பற்றி கலந்துரையாடினோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தை எதிர்பார்ப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லையெனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் வரவு- செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.