வரவு செலவுத் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நிவாரணம்

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிமுறைகள் அறிமுகப்படுத்து அவசியம் என்று இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நாட்டின் பாரம்பரிய கைத்தொழில் உற்பத்திகளுக்கு அதிகபட்ச கேள்வியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என்று குறிப்பிட்ட நிதி இராஜாங்க அமைச்சர், வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைக்கு முன்னுரிமை வழங்கப்படுமென்றும் கூறினார்.

முதலீடுகளை வலுப்படுத்தக்கூடிய பொறிமுறையொன்றைத் தயாரித்து தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கு உள்ளூர் உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.