வரலாற்றில் இன்று 28.02.2020

பெப்ரவரி 28  கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784 – ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844 – USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1897 – மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரெஞ்சுப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் ஜப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டொக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
2002 – அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

பிறப்புகள்

1929 – பிராங்க் கெரி, கட்டிடக்கலைஞர்
1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)
1933 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
1953 – பால் கிரக்மேன், அமெரிக்க பொருளியல் நிபுணர்
1969 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)

இறப்புகள்

1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் (பி. 1790)
1936 – சார்ல்ஸ் நிக்கோல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1866)
1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் (பி. 1884)
2006 – ஓவன் சாம்பர்லெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1920)

சிறப்பு நாள்

இந்தியா – தேசிய அறிவியல் நாள்

LEAVE A REPLY