வரலாற்றில் இன்று 27.02.2020

பெப்ரவரி 27  கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1560 – ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.
1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.
1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1801 – வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844 – டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1861 – போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
1879 – சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
1900 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் போவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றி சரணடைவதாக அறிவித்தார்.
1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1933 – பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1940 – ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.
1951 – ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1967 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவெய்த் விடுதலையானதாக அறிவித்தார்.
2002 – குஜராத் வன்முறை 2002: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2004 – பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

பிறப்புகள்

272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரரசர் (இ. 337)
1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர் (இ. 1999)
1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)
1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி
1944 – கிரகாம் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்
1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்
1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்
1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)

இறப்புகள்

1921 – இசுக்கோஃபீல்ட் ஹை, ஆங்கிலேயது துடுப்பாளட் (பி. 1871)
1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)
1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)
2008 – சுஜாதா, எழுத்தாளர் (பி. 1935)
    2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)

சிறப்பு நாள்

டொமினிக்கன் குடியரசு – தேசிய நாள்

1 COMMENT

Leave a Reply to S.subramanian Cancel reply