வரலாற்றில் இன்று 26.03.2019

மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டின் 85 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 86 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 280 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1199 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான்.
1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.
1953 – போலியோ தடுப்பூசி அறிமுகம்.
1812 – வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.
1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.
1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக்கைதிகளாயினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
1953 – ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.
1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.
1971 – கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
1979 – இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது.
1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.
1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
2000 – விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.
2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பிறப்புக்கள்

1874 – றொபேட் ஃபுறொஸ்ட் அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
1913 – பால் ஏர்டோசு, அங்கேரிய கணிதவியலாளர் (இ. 1996)
1916 – கிறிஸ்டியன் ஆன்பின்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1995)
1938 – அந்தனி லெகெட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1940 – நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி
1941 – ரிச்சர்ட் டாக்கின்ஸ், படிவளர்ச்சி உயிரியலாளர்
1951 – கார்ல் வைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1962 – ஜான் ஸ்டாக்டன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1827 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)
1892 – வால்ட் விட்மான், அமெரிக்கக் கவிஞர் (பி. 1819)
2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)

சிறப்பு நாள்

வங்காள தேசம் – விடுதலை நாள் (1971)

LEAVE A REPLY