வரலாற்றில் இன்று 25.06.2018

ஜூன் 25  கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1678 – எலேனா பிஸ்கோபியா தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
1940 – பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியாப் போர் ஆரம்பமானது.
1967 – உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1975 – போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
1983 – லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
1991 – குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.
1996 – சவுதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1997 – புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.
1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1900 – மவுண்ட்பேட்டன் பிரபு, பர்மாவின் முதலாம் ஏர்ள் மவுண்ட்பேட்டன், இந்தியாவின் கடைசி வைசிராய் (இ. 1979)
1931 – வி. பி. சிங், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2008)
1925 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்
1962 – நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (இ. 2006)
1966 – டிகெம்பே முடம்போ, காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர்
1974 – கரிஸ்மா கபூர், இந்திய நடிகை
1981 – பூஜா, நடிகை

இறப்புகள்

1894 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சுக் குடியரசின் அரசுத் தலைவர் (பி. 1837)
1971 – ஜோன் ஓர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1880);
1984 – மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (பி. 1926)
2009 – மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)

சிறப்பு நாள்

மொசாம்பிக் – விடுதலை நாள் (1975)

LEAVE A REPLY