வரலாற்றில் இன்று 25.03.2020

மார்ச் 25  கிரிகோரியன் ஆண்டின் 84 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 85 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 281 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1584 – வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார்.
1634 – மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.
1655 – டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.
1807 – அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.
1821 – (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது.
1857 – பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
1911 – நியூயோர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.
1918 – பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகொஸ்லாவியா இணைந்தது.
1947 – இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர்.
1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1957 – மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
1965 – மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1971 – வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1975 – சவுதி மன்னர் ஃபைசால் தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 – நியூயோர்க் நகரில் சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர்.
1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

பிறப்புக்கள்

1914 – நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009)

இறப்புக்கள்

2014 – தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)

சிறப்பு நாள்

கிரேக்கம் – விடுதலை நாள்

LEAVE A REPLY