வரலாற்றில் இன்று 24.03.2020

மார்ச் 24  கிரிகோரியன் ஆண்டின் 83 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1878 – பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1882 – காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
1923 – கிறீஸ் குடியரசாகியது.
1944 – ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.
1947 – மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
1965 – டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.
1972 – ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.
1998 – இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.
1999 – கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
1999 – பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1776 – முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)
1874 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க நடிகர் (இ. 1926)
1884 – பீட்டர் டெபாய், டச்சு-அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1966)
1903 – அடால்ஃப் புடேனண்ட்ட், செருமானிய வேதியியலாலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)
1923 – டி. எம். சௌந்தரராஜன், பின்னணிப் பாடகர்
1936 – டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்
1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல்வாதி, 13வது பிரதமர்
1956 – இசுட்டீவ் பால்மர், அமெரிக்கத் தொழிலதிபர்
1965 – தி அண்டர்டேக்கர், அமெரிக்க மற்போர் வீரர்
1979 – இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்
1979 – கிரீம் ஸ்வான், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1984 – கிரிஸ் பாஷ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1987 – சகீப் அல் அசன், வங்க தேசத் துடுப்பாளர்
1988 – ரயான் ஹிக்கின்ஸ், சிம்பாப்வே துடுப்பாளர்

இறப்புக்கள்

1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)
1905 – ழூல் வேர்ண், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1828)
1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)

சிறப்பு நாள்

அனைத்துலக காச நோய் நாள்

LEAVE A REPLY