வரலாற்றில் இன்று 24.02.2020

பெப்ரவரி 24  கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1387 – நேப்பில்ஸ் மற்றும் ஹங்கேரி மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கொல்லப்பட்டான்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1739 – இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.
1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
1875 – ஆஸ்திரேலியக் கிழக்குக் கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
1881 – சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
1920 – நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1942 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
1981 – கிரேக்கத்தில் ஏத்தன்ஸ் நகரில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் கொல்லப்பட்டனார்.
1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2009 – வாட்ஸ் ஏப் (WhatsApp) நிறுவனம், ஜான் கௌமால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

பிறப்புகள்

1304 – இபின் பட்டூட்டா, பயணி
  1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்
  1948 – ஜெ. ஜெயலலிதா, தமிழ்நாட்டு முதலமைச்சர்
1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்

இறப்புகள்

1986 – ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)
2015 – ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)

சிறப்பு நாள்

எஸ்தோனியா – விடுதலை நாள் (1918)

LEAVE A REPLY