வரலாற்றில் இன்று 22.04.2020

ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டின் 112 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 113 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 253 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1500 – பிரேசிலைக் கண்ட முதல் ஐரோப்பியர் போர்த்துக்கீசரான பேதுரோ கப்ரால்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.
1889 – நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
1898 – அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
1912 – ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
1970 – முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.
1983 – ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.
1992 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.
1997 – அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1997 – பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
2004 – வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.
2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

பிறப்புகள்

1451 – முதலாம் இசபெல்லா, எசுப்பானிய அரசி (இ. 1504)
1724 – இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவியலாளர் (இ. 1804)
1870 – விளாதிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924)
1881 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970)
1899 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1977)
1904 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
1909 – ரீட்டா லெவி மோண்டால்சினி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 2012)
1916 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிசு இசையமைப்பாளர் (இ. 1999)
1937 – ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்
1940 – க. சட்டநாதன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர்
1981 – ஜொனாதன் ட்ரொட், பிரித்தானியத் துடுப்பாளர்
1982 – காகா, பிரேசில் காற்பந்து வீரர்

இறப்புகள்

296 – காயுஸ் (திருத்தந்தை)
1616 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (பி. 1547)
1989 – எமீலியோ சேக்ரே, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-இத்தாலியர் (பி. 1905)
1994 – ரிச்சர்ட் நிக்சன், 37வது அமெரிக்க அரசுத்தலைவர் (பி. 1913)
2002 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (பி. 1949)
2013 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (பி. 1930)

சிறப்பு நாள்

பூமி நாள்

LEAVE A REPLY