வரலாற்றில் இன்று 22.02.2020

பெப்ரவரி 22  கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1495 – பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்ல்ஸ் நேப்பில்சை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.
1658 – டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.
1819 – ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.
1848 – பாரிசில், லூயி பிலிப் மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
1853 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1862 – அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1882 – சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.
1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.
1943 – நாசி ஜெர்மனியில் வைட் ரோஸ் இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.
1948 – செக்கோசிலவாக்கியா கம்யூனிசப் புரட்சி இடம்பெற்றது.
1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.
1961 – ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
1969 – பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
1974 – சாமுவேல் பிக் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனைக் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2002 – அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாஸ் சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
  2002 – இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.
2006 – பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

பிறப்புகள்

1732 – ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799)
1824 – பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (இ. 1907)
1857 – பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941)
1879 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1947)
1914 – ரெனாட்டோ டுல்பெக்கோ, உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்
1932 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (இ. 2009)
1936 – மைக்கேல் பிஷப், உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்
1938 – கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர், நாட்டுப்பற்றாளர் (இ. 1992)
1962 – ஸ்டீவ் இர்வின் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர் (இ. 2006)
1963 – விஜய் சிங், கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

1556 – ஹுமாயூன், முகலாயப் பேரரசன் (பி. 1508)
1944 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)
1987 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (பி. 1928)
2006 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)

சிறப்பு நாள்

சென் லூசியா – விடுதலை நாள் (1979)
புனித பேதுரு திருவிழா

LEAVE A REPLY