வரலாற்றில் இன்று 21.06.2020

ஜூன் 21  கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1734 – கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.
1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
1970 – பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
  1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1999 – அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 – விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.
2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

பிறப்புகள்

1905 – ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)
1947 – ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
1953 – பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

இறப்புகள்

1970 – சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)
2001 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)

சிறப்பு நாள்

உலக இசை தினம்
கனடா – தேசிய பழங்குடிகள் நாள்
கிறீன்லாந்து – தேசிய நாள்
பன்னாட்டு யோகா நாள்

LEAVE A REPLY