வரலாற்றில் இன்று 21.04.2020

ஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 753 – ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
கிமு 43 – ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1509 – ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1526 – பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
1792 – பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
1863 – கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 – இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1822 – இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.
1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 – பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1967 – கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1989 – பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1994 – சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.

பிறப்புகள்

1651 – யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)
1837 – பிரெட்ரிக் பேஜர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1922)
1864- மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
1882 – பேர்சி பிரிட்ஜ்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1961)
1889 – பவுல் காரெர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1971)
1925 – வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (இ. 2014)
1926 – இரண்டம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1956 – மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி

இறப்புகள்

1910 – மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
1938 – முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞர் (பி. 1877]])
1946 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1883)
1964 – பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
1965 – எட்வர்ட் ஆப்பில்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1978 – டி.ஆர்.மகாலிங்கம், தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923)

சிறப்பு நாள்

ரித்வான் முதல் நாள் – பஹாய் சமயம்

LEAVE A REPLY