வரலாற்றில் இன்று 21.01.2019

ஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.
1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.
2009 – செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்ட தினம்.

பிறப்புகள்

1912 – கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)
1953 – பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.
1963 – அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754)
1924 – விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)
1926 – கேமிலோ கொல்கி, இத்தாலிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)
1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய செயல்முறையாளர் (பி. 1886)
1950 – ஜார்ஜ் ஆர்வெல், இந்திய-ஆங்கிஏய எழுத்தாளர் (பி. 1903)
1989 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ வல்லுனர் (பி. 1914)
1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்

LEAVE A REPLY