வரலாற்றில் இன்று 19.06.2020

ஜூன் 19  கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னன் கட்டளையிட்டான்.
1867 – மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.
1912 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகியது.
1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பீன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது.
1953 – அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1961 – குவெய்த் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1987 – ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர்ர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1623 – இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1662)
1903 – வால்ரர் ஹமொண்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (இ. 1965)
1947 – சல்மான் ருஷ்டி, இந்திய எழுத்தாளர்
1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி
1978 – டெர்க் நொவிட்ச்கி, ஜெர்மன் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1985 – காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை

இறப்புகள்

1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (பி. 1641)
1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ மன்னன் (பி. 1832)
1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)

LEAVE A REPLY