வரலாற்றில் இன்று 19.05.2020

மே 19  கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1536 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி “ஆன் பொலெயின்” வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1604 – கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.
1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1897 – ஐரிய எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1961 – சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.
1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1991 – அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.

பிறப்புக்கள்

1762 – யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814)
1882 – மொஹம்மது மொஸாடெக், ஈரானியத் தேசிய இயக்கத்தின் தலைவர்
1890 – ஹோ ஷி மின், வியட்நாமியத் தலைவர் (இ. 1969)
1925 – பொல் பொட், கம்போடிய சர்வாதிகாரி (இ. 1998)
1925 – மால்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் (இ. 1965)
1976 – கெவின் கார்னெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1904 – ஜாம்செட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (பி. 1839)
1985 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (பி. 1913)
1996 – ஜானகி இராமச்சந்திரன் திரைப்பட நடிகை, தமிழக அரசியல்வாதி இ.1924
2007 – ஜோதி, தமிழ்த் திரைப்பட நடிகை

சிறப்பு நாள்

உக்ரேன் – அறிவியல் நாள்

LEAVE A REPLY