வரலாற்றில் இன்று 18.06.2020

ஜூன் 18  கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

618 – லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
1429 – ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன.
1767 – பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன.
1812 – 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.
1815 – வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான்.
1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
1908 – ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர்.
1923 – எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.
1948 – மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1953 – எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.
1953 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று டோக்கியோவுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
1979 – சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது..
1981 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.
1981 – அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
2001 – நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
2004 – ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது.
2006 – கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.

பிறப்புகள்

1908 – கக்கன், தமிழக அரசியல்வாதி (இ. 1981)
1924 – கோபுலு, தமிழக ஓவியர் (இ. 2015)
1942 – தாபோ உம்பெக்கி, தென்னாபிரிக்க அதிபர்
1960 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)
1967 – அரவிந்த்சாமி, நடிகர், தொழிலதிபர்

இறப்புகள்

  1873 – லீவை ஸ்போல்டிங், யாழ்ப்பாணம், உடுவில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், ஆங்கில-தமிழ் அகராதியைத் தொகுத்தவர்.
1971 – போல் காரெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)
2009 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)

சிறப்பு நாள்

சிஷெல்ஸ் – தேசிய நாள்

LEAVE A REPLY